11.6.12

ANNA UNIVERSITY COUNSELING PROCEDURE (IN TAMIL)கலந்தாய்வு வழிமுறைகள் | அண்ணா பல்கலை கழக கலந்தாய்வு வழிமுறைகள்

ANNA UNIVERSITY COUNSELING PROCEDURE (IN TAMIL)
கலந்தாய்வு வழிமுறைகள் |  அண்ணா பல்கலை கழக கலந்தாய்வு வழிமுறைகள் 

தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்களுக்காக இந்த கட்டுரை எழுதப் படுகிறது.
எவரும் சுலபமாக கடைபிடிக்க முடியும் அளவில் அண்ணா பல்கலை கழகம் இந்த கலந்தாய்வை நடத்தி வருகின்றது.

கலந்தாய்வு என்பது அறிவுரை கொடுத்து தெளிவுபடுத்தி உங்களை உங்கள் விருப்பபடி கொண்டு செல்லும் ஓர் அறிய சந்திப்புதான்.  நீங்கள் சுலபமாக கலந்து கொண்டு உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்கள் பெறுவதுதான் இந்த கலந்தாய்வின்  முக்கிய நோக்கம் என்றல் மிகையாகது.

அண்ணா பல்கலையின் கலந்தாய்வு மையத்தில் நடக்கும் இந்த சந்திப்பின் போது தங்களுக்கு  உதவ தயாராக வழி நடத்துபவர்கள் (கவுன்செல்லர்ஸ்)  இருப்பார்கள். இவர்கள் உங்களுக்கு என்ன கல்லூரியில் என்ன பாடம்  காலியாக இருக்கிறது உங்கள் விருப்பம் என்ன   என்று கேட்டு உங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே உங்களுக்கு உகந்த கல்லூரியை தெரிவு செய்து தருவார்கள்.  உங்கள் சந்தேகங்களுக்கு சரியான தெளிவுரைகளை தருவார்கள்.உங்கள் விருப்பம்தான் முடிவானது,


கலந்தாய்வு மையத்தில் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் கலந்தாய்வு என்றால்  என்ன என்பது உங்களுக்கு தெளிவாக விவரிக்கப்படும்.


என்னென்ன கொண்டு வர  வேண்டும்

(1) கலந்தாய்வு அழைப்பு கடிதம்
(2) அனைத்து அசல்  சான்றிதழ்கள்
(3) ரூபாய் ஐந்தாயிரம் (பணமாகவோ / கேட்பு வரைவோலையாகவோ)

எப்பொழுது செல்லவேண்டும் 

உங்கள் முறை வருவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு செல்ல வேண்டும்

எங்கு செல்ல வேண்டும் 

 கலந்தாய்வு மையம், அண்ணா  பல்கலை கழகம்,  கிண்டி, சென்னை 25


COUNSELLING CENTRE, ANNA UNIVERSITY, GUINDY, CHENNAI.

அண்ணா பல்கலை கழகம் எங்குள்ளது ?

அண்ணா பல்கலைகழகம், சைதாபேட்டையில் இருந்தும், கத்திபாரா சந்திப்பில் இருந்தும் அடையார் செல்லும் வழியில் உள்ளது. பேருந்து நிறுத்தம் அண்ணா பல்கலை அருகில் உள்ளதால் யாரும் குழம்ப தேவை இல்லை. அணைத்து அடையார் மற்றும் திருவான்மியூர் செல்லும் பேருந்துகளும் எதிர் புற வழியில் சைதாபேட்டை மற்றும் கத்திபாரா வழி செல்லும் பேருந்துகளும்அண்ணா பல்கலையில்  நிற்கும்.

எக்மோர் (எழும்பூர்) மற்றும் சென்ட்ரல் ரயில் நிலத்தில் இருந்தும் சுலபமாக பேருந்தில் வரலாம். ஆட்டோ அதிக கட்டணம் வசூலிப்பார்கள்.



தங்களுடன் யார் வரலாம்  

பெற்றோர்கள் , உறவினர், உங்களுக்கு நெருங்கியவர்  (ஒருவர் மட்டும்.)


 வெளியில் உள்ள பெரிய ஸ்க்ரீன் உங்களுக்கு உதவத்தான் 

அங்குள்ள  பெரிய ஸ்க்ரீனில் அவ்வப்போது எந்த கல்லூரியில் எந்த படைப்பிரிவு காலியாக உள்ளது என்றும் எந்த ஜாதிக்கு எந்த பிரிவு எதனை இடங்கள் காலியாக உள்ளன என்றும் அறிவிக்கப்படும்.

இந்த அறிவிப்பை நீங்கள் தங்களுக்கு என்ன கல்லூரி என்ன பாடம் தேவை என ஒரு தாளில் குறித்து கொண்டால் உங்களுக்கு இது மிகவும்  உதவியாக இருக்கும்.

ஒதுக்கப்படும் கல்லூரியும் பிரிவும்  பின்னர் மாற்ற முடியாது என்பதால், முதலிலேயே நன்கு முடிவு செய்து உங்கள் கல்லூரி மற்றும் பிரிவை தெரிவு செய்ய வேண்டும்.

கலந்தாய்வு அறையில் உங்கள் முறை வந்ததும் நீங்கள் உங்களுடன் வருபவர் ஒரு கணினி முன்பு அமரவைக்கப்பட்டு உங்களுக்கென உள்ள கவுன்செல்லர்
உங்களுடைய விருப்பத்தை அறிந்து கணினி மூலம் உங்களுக்கு நீங்கள் அறியும் வண்ணம் காண்பிப்பார்.

காலியாக உள்ள கல்லூரி மற்றும் பிரிவு சாதி அடிப்படையில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். நீங்கள் நன்கு யோசித்து உங்கள் முடிவை தெரிவிக்க போதிய அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர் ஒதுக்கீடு ஆணை  (allotment order) கொடுக்கப்படும்.


ஏதாவது  சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் கவுன்செல்லரிடம்  தாரளமாக கேட்டு தெளிவு பெறலாம்.


தங்களுக்கு கலந்தாய்வு கடிதம் வரா விட்டாலும் செய்தி தாள் மூலமாக உங்கள் மதிப்பெண் ஒத்த கலந்தாய்வு என்று எத்தனை  மணி என அறிந்து கொண்டு தாராளமாக  கலந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Infolinks In Text Ads

Popular Posts